Chapter 111 - ஸூரத்துல் லஹப்


அத்தியாயம் - 111

ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாடைக, அவனும் நாசமாகட்டும்.

111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

111:4.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).