Chapter 041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா


அத்தியாயம் - 41

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

41:1. ஹா, மீம்.

41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இற்ககியருளப்பட்டது;

41:3. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.

41:4. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.

41:5. மேலும் அவர்கள்; ''நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன் எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்"" என்று கூறினர்.

41:6. ''நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக் இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்"" என்று (நபியே!) நீர் கூறும்.

41:7. அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!

41:8. ''நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.""

41:9. ''பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்"" என்று (நபியே!) கூறுவீராக.

41:10.அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

41:11.பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்; ''நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெளுப்பிருப்பினும் வாருங்கள்"" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ''நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்"" என்று கூறின.

41:12.ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

41:13.ஆகவே, அவர்கள் புற்களித்து விடுவார்களாயின், ''ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சறுத்துகின்றேன்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக!.

41:14. ''அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்"" என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது; ''எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்"" என்று சொன்னார்கள்.

41:15.அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, ''எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?"" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.

41:16. ஆதலினால், இவ்வுலக வாழ்பில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.

41:17.ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் சருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

41:18.ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.

41:19.மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.

41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ''எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?"" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ''எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்"" என்று கூறும்.

41:22.''உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுகு;கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் கொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.

41:23.ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24.ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகம் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

41:25.நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.

41:26.''நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்"" என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.

41:27.ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.

41:28. அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.

41:29. (அந்நாளில்;) காஃபிர்கள்; ''எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)"" எனக் கூறுவார்கள்.

41:30. நிச்சயமாக எவர்கள்; ''எங்கள் இறைவன் அல்லாஹ்தான்"" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ''நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்"" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

41:31.''நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

41:32.''மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்"" (இது என்று கூறுவார்கள்).

41:33.எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து; ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?"" (இருக்கின்றார்?)

41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

41:36. உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.

41:37.இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸூஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸூஜூது செய்யுங்கள்.

41:38.ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.

41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

41:40. நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.

41:41. நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.

41:42.அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

41:43.(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.

41:44.நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?"" என்று அவர்கள் கூறியிருப்பார்கள். ''இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்"" என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன் அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கினறனர்.

41:46.எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.

41:47.(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாதது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் ''எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?"" என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் ''எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை"" என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்"" என்று கூறுவார்கள்.

41:48.அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

41:49.மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.

41:50.எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சவைக்கச் செய்தால், அவன் ''இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென் நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்"" என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்.

41:51.அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.

41:52.''(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?"" என்று (நபியே!) நீர் கேளும்.

41:53. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?

41:54.அறிந்து கொள்க் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்நது (அறிந்தவனாக) இருக்கிறான்.