Chapter 071 - ஸூரத்து நூஹ்


அத்தியாயம் - 71

ஸூரத்து நூஹ்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

71:1. நிச்சயமாக நாம் நூஹைஇ அவருடைய சமூகத்தாரிடம்; ''நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக"" என (ரஸ_லாக) அனுப்பினோம்.

71:2. ''என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்"" என்று கூறினார்.

71:3. ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.

71:4. ''(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போதுஇ அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்"" (என்றும் கூறினார்).

71:5. பின்னர் அவர்இ ''என் இறைவா! நிச்சயமாகஇ நான் என் சமூகத்தாரை இரவிலும்இ பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.

71:6. ''ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.

71:7. ''அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காகஇ (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம்இ தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்இ மேலும்இ தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர்இ அன்றியும்இ அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.

71:8. ''பின்னர்இ நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.

71:9. ''அதன் பின்னர்இ நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.

71:10. மேலும்இ ''நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்"" என்றுங் கூறினேன்.

71:11. ''(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.

71:12. ''அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும்இ புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும்இ உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

71:13. ''உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும்இ மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.

71:14. ''நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.

71:15. ''ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

71:16. ''இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும்இ சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

71:17. ''அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.

71:18. ''பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்துஇ மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.

71:19. ''அன்றியும்இ அல்லாஹ்இ உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

71:20. ''அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்"" (என்றும் போதித்தார்).

71:21. நூஹ் கூறினார்: ''என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்இ அன்றியும்இ எவர்களுக்கு அவர் பொருளும்இ அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோஇ அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.

71:22. ''மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.""

71:23. மேலும் அவர்கள்; ''உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்துஇ ஸூவாஉஇ யகூஸூஇ யஊக்இ நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்"" என்றும் சொல்கின்றனர்.

71:24. ''நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்இ ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிரஇ வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.""

71:25. ஆகவேஇ அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டுஇ பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவேஇ அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.

71:26. அப்பால் நூஹ் கூறினார்: ''என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.

71:27. ''நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும்இ பாவிகளையும்இ காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.

71:28. ''என் இறைவா! எனக்கும்இ என் பெற்றோருக்கும்இ என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும்இ முஃமினான ஆண்களுக்கும்இ முஃமினான பெண்களுக்கும்இ நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும்இ அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே"" (என்றும் கூறினார்).